பக்கம் எண் :

களவியல் சூ. 41 461

“மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென
வலையல் வாழிவேண் டன்னை”      (அகம்-158)

“அட்டிலோலை தொட்டனை நின்மே”      (நற்றிணை-300)

என வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது.

“உளைமான் றுப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
வுரைத்த சந்தி னூர லிருங்கதுப்
பைதுவர லசைவளி யாற்றக் கைபெயரா
வொலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகன் மழகளி றுறங்கு நாட
னார மார்பி னரிஞிமி றார்ப்பத்
தாரன் கண்ணிய னெஃகுடை வலத்தன்
காவல ரறித லோம்பிப் பையென
வீழாஅக் கதவ மசையினன் புகுதந்
துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந்
தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் றோழி
யின்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவ
னல்கா மையி னம்ப லாகி
யொருங்குவந் துலக்கும் பண்பி
னிருஞ்சூ ழோதி யொண்ணுதற் பசப்பே”      (அகம்-102)

இது மனையகம் புக்கது.

தலைவி புறத்துப் போகின்றாளெனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென்றுணர்க.

சிவ.

இரவுக் குறிக் கூட்டமானது தலைவியின் வீட்டு எல்லையில், வீட்டில் உள்ளார் பேசும் பேச்சுக் கேட்கும் அணிமையில்,