பகற் குறியிடம் 150. | பகற்புணர் களனே புறன்என மொழிப | | அவள்அறி வுணர வருவழி யான (42) |
ஆ. மொ. இல. The day meeting-place will be outside the house, the way to which being known to her. இளம். என்றது பகற்குறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : பகற்குறியாகிப் புணருமிடம் எயிற்புறன்1 என்று சொல்லுவர். ஆண்டுந் தலைமகள் அறிவுற்று வரும் இடனாகல் வேண்டும் என்றவாறு. நச். இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது. (இ-ள்) : அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர்களனே-களஞ் சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும்படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை, புறன்என மொழிப-மதிற்புறத்தே யென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. அறிவு, ஆகுபெயர்2. (உ-ம்) “புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு” எனவும்,
1. எயிற்புறம் என்றது வீட்டின் எல்லையாக அமைந்த எயிலின் புறத்தேயுள்ள இடங்களையும், ஊர்ப்புறத்தே தலைவி ஆயத்துடன் போந்து விளையாடும் பொழிலின்கண் அமைந்த மறைப்பிடத்தையும் ஆம். 2. அறிவு-அறிவு என்பது அறிந்த இடத்துக்கு ஆகி வருதலின் ஆகுபெயர். |