“பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே” (அகம்-240) எனவும் வருவன பிறவுங் கொள்க. வெள். இது பகற் குறியாவது இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) : பகலிற் காதலர் இருவரும் தனிமையில் கண்டு அளவளாவுதற்குரிய பகற்குறியாகிய இடம் ஊரின்புறம் என்பர் ஆசிரியர். அதுதானும் தலைமகள் அறிவுற்று உணர்ந்து வரும் வழியினையுடையதாம் நிலைமைக் கண், எ-று. அவள் என்றது தலைமகளை. புறம் என்றது இளமகளிர் புறத்தே போய் விளையாடுதற்குரிய பொழில் சூழ்ந்த ஊர்ப்புறத்தினை. தலைமகள் அறிவுற்று உணர்ந்து தலைவனைத் தலைப்படுதற்குரிய வழியுடன் கூடியவிடமே பகற் குறியாகக் கொள்ளத் தக்கது என்பார்,‘அவள் அறிவுணர வருவழியான புறமே பகற்புணர் களன்’ என்றார் ஆசிரியர். ‘பகற் குறிதானே இருப்பினும் வரையார் (20) எனவரும் இறையனார் களவியல் சூத்திரம் பகற்புணர்களனே புறம் ஆதலைப் புலப்படுத்துவதாம். அல்ல குறிப்படுதல் 131. | அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே | | அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே (43) |
ஆ. மொ. இல. She may be mis-led somtimes when she mistakes some for his sign. பி. இ. நூ. இறை. 17. அல்ல குறிப்படுதலும் அவ்வயின் உரித்தே அவள்வர வறியுங் குறிப்பின் ஆன. |