பக்கம் எண் :

களவியல் சூ. 43 467

“அன்னை வாழியோ அன்னைநம் படப்பை
பொம்ம லோதி யம்மென் சாயல்
மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய
புன்னை மென்காய் போகுசினை யிரிய
வாடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென
வெண்ணினை யுரைமோ ணவர்குவல் யானே”1

இது தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது.

“மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப
னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற்
றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத்
துணிமுந்நீர் துஞ்சா தது”2      (ஐந்-எழு-60)

இது. தோழி இல்லுளிருந்து சிறைபுறமாகக் கூறியது.

திங்கள்மேல் வைத்துக் கூறுவனவும் ஓதத்தின்மேல் வைத்துக் கூறுவனவும் பிறவுங் கொள்க.

“அரவளை மென்றோ ளனுங்கத் துறந்து
கரவல மென்றாரைக் கண்ட திலையா
லிரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள்”3

“புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும்
பின்னிருங் கூந்தலென் றோழி நடையொக்கு
மன்னம் நனையாதி வாழி கடலோதம்”4

என வருவன பிறவுங் கொள்க.


1. கருத்து: பக்கம் 313-ல் காண்க.

2. கருத்து: கடலானது அலை அலையத் தூங்காத காரணம் எம்மைப் போலவே தானும் தன் சேர்ப்பன் தன் அணி நலம் உண்டு பிரிந்தான் என்பதுவோ?

3. கருத்து: குளிர்ந்த கதிர்களையுடைய திங்களே! நீ இரவெல்லாம் மேலே நின்றாயே என்னுடைய தோள் வருந்தத் துறந்து முன்னாளில் நின்னைப் பிரியேம் என்று சொல்லிப் பிரிந்தாரை வரக் கண்டதில்லையோ.

4. கருத்து: கடலலையே நீ புன்னையை நனைத்தாலும் பூக்களுடைய கிளைகளை மூழ்கத் தோய்ந்தாலும்