‘படுதல்’ எதிர்ப்படாமையை உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுதறிந்து வாராமையின் மயங்கிற்றென்று அமைவு தோன்றலின் ‘அமைவு’ என்றார். அது, “தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே”1 (குறுந்-121) என்றாற்போல வரும். இதன் பயன் தலைவி துன்பந் தனதாகத் துன்புறுத்தலாயிற்று. வெள். இது தலைமகள் அல்லகுறிப்படுமாறும் அதற்குரிய காரணமும் கூறுகின்றது. இ-ள் தலைவன் தன்னாற் குறிக்கப்பட்ட அடையாளங்களோடு இயற்கை நிகழ்ச்சிகள் ஒத்துத் தோன்றி மயங்கிய நிலையில் இரவுக்குறிக்கண் வருவானாயின் அவன் செய்த குறியல்லாத இயற்கை நிகழ்ச்சிகளை அவனால் செய்யப்பட்ட குறிகளாகப் பிறழவுணர்ந்து குறியிடத்துச் சென்று தலைவனைக் காணாது திரும்புதலும் தலைமகட்குரித்து, எ-று. குறிமயங்கிய அமைவொடு அவன் வரின் அல்லகுறிப்படுதலும், அவள்வயின் உரித்து என இயையும். புள்ளெழுப்புதல் புனலொலிப்படுத்தல் முதலாகத் தலைவன் செய்யும் அடையாளங்களை யொத்துப் பறவைகள் வேற்றினப் பறவை கண்டு எழுதலும் காய் முதலிய நீர் நிலையில் துடுமென வீழ்தலும் முதலிய இயற்கை நிகழ்ச்சிகள் மயங்கித் தோன்றிய நிலைமைக்கண் அவற்றைத் தலைவன் செய்த அடையாளங்களாக எண்ணிக் குறியிடத்தே சென்று தலைவனைக் காணப் பெறாது அல்லகுறிப்பட்டு மீளுதலும் தலைமகட்கு உரியதாகும் என்பது இந்நூற்பாவினால் உணர்த்தப்படும் செய்தியாகும். அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர வறியும் குறிப்பினான (17)
என் தோழியின் நடையையொத்து நடக்கும் அன்னத்தை மட்டில் நனையாதே வாழி. 1. கருத்து: தலைவன் தான் குறியிடத்து வந்து சேராத்தவற்றுக்கு என் தோள்கள் பசலையுற்றன. |