பக்கம் எண் :

களவியல் சூ. 43 469

எனவரும் இறையனார் களவியல் இத் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி அமைந்தமை காண்க.

சிவ.

இச் சூத்திரம் தலைவியும் தோழியும் அல்லகுறிப்படுமாறும் அதன் காரணமும் கூறுகின்றது.

(இ-ள்) : தலைவனால் தான் வந்தமை தெரிவிக்கும் அடையாளமாக இன்னது என்று குறிக்கப்பட்ட அடையாளமானது வேறோர் காரணத்தால் மாறுபட்ட அமைவொடு நிகழவரின் அதன் காரணமாக அல்லகுறிப்பட்டுத் தலைவனைக் காணாமல் மீளல் அவளிடத்தும் உரித்து என்றவாறு.

‘அல்ல குறிப்படுதலும் அவள்வயின் உரித்து’ என்பதில் உம்மையை அல்லகுறிப்படுதல் ‘அவள் வயினும் உரித்து’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘அவள் வயினும்’ என்ற உம்மையால் தோழிவயினும் உரித்து எனக் கொள்க.

அல்லகுறி-அன்மையாகிய அடையாளம். குறியாவது புள்ளெழுப்புதலால் புள்ளொலியெழச் செய்தல் குளத்து நீரில் காய்(கல்) எறிந்து ஒலியெழுச் செய்தல் போல்வனவாகிய அடையாளம். நல்ல பொருள்போல அல்லகுறி என்பது குறிப்பு வினைப் பெயரெச்சத் தொடர்.

இச்சூத்திரம் தலைவி அல்ல குறிப்பிடுமாறு கூறுகின்றது என்பர் இளம்பூரணர். இச்சூத்திரத்து அவள் என்றது தலைவியை எனக் கொண்டார். அவள் என்றது தோழியை எனக்கொண்டு தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றதாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். அதற்கு அவர் கூறும் காரணம் “இருவகைக் குறிபிழைப்பாகிய விடத்தும்” என்னும் சூத்திரத்தில் தலைவி அல்லகுறிப்படுதல் கூறப்பட்டு விட்டது என்பதே. “இருவகைக் குறி பிழைப்பாகிய” என்னும் சூத்திரத்தின் இறுதியடியின் முதலில் ‘கிழவோன் மேன’ என்று இளம்பூரணர் பாடம் கொண்டு அச்சூத்திரம் தலைவன் கூற்று நிகழும் இடம் கூறுவதாகக் கொள்ள, நச்சினார்க்கினியர் ‘கிழவோள் மேன’ எனப் பாடங் கொண்டு தலைவி கூற்று நிகழும் இடம் உணர்த்துவதாகக் கூறினார். அதனால் அச் சூத்திரத்தில் தலைவிக்கு இருவகைக் குறிபிழைப்பு