பக்கம் எண் :

470தொல்காப்பியம்-உரைவளம்

(அல்லகுறிப்படுதல்) நிகழ்தல் உண்டு என்பது கூறப்பட்டு விட்டமையின்’ அல்ல குறிப்படுதலும்’ என்னும் இச்சூத்திரத்தில் மீண்டும் கூறுதல் கூறியது கூறலாகும் என்பதால் தோழி அல்ல குறிப்படுமாறு கூறுவதாகக் கூறினார். ‘கிழவோன் மேன என்னும் பாடமே அமையும் எனக் கொள்ளும்போது இச்சூத்திரத்து ‘அவள்’ என்றது தலைவியையே என்னலாம். எனினும் தலைவன் செய்யாத குறி (அடையாளம்) வேறொன்றால் மயங்கியவழி மனையகத்திலிருந்து தலைவியைக் குறியிடத்து உய்த்துச் செல்லுதலும் தோழியின் கடமையாதலின் அவ்வாறு உய்ப்பதன் முன்னர்த் தலைவன் இருப்பது அறிய அக்குறியிடம் வரும்போது அவன் இல்லாமை கண்டு மீளவும் நேரும். அதனால் தோழியும் அல்ல குறிப்படுதல் உண்டு. எனவே நச்சினார்க்கினியர் கூறிய உரையும் ஓரளவில் ஏற்புடையதே. அதனால் தலைவியும் தோழியும் தான் அவள் என்னும் வேற்றுமையின்றியிருத்தலின் அவள் என்றது தோழியையும் குறிக்கும் எனக்கொண்டு அல்ல குறிப்படுதல் தலைவிக்கு உரியது மட்டுமன்றித் தோழிக்கும் உரியதாகக் கொள்ளலாம். எனினும் இச்சூத்திரத்து ‘அவள்’ என்றது முதலில் தலைவியையே குறிப்பதாகக் கொள்ளல் வேண்டும். ஏன்எனின் ‘இருவகைக் குறிபிழைப்பாகிய விடத்தும்’ என்பதில் நச்சினார்க்கினியர் கருத்துப்படித் தலைவியின் கூற்று நிகழ் இடங்களுள் ஒன்றாக இருவகைக் குறிபிழைப்பாகிய இடம் என்பது கூறப்பட்டதேயன்றி குறிபிழைப்பாவது யாது என்பதும் காரணமும் கூறப்படவில்லை; அவை இச்சூத்திரத்தில் தான் கூறப்பட்டன, ஆதலின்.

குறியிடப் புறனடை

132. ஆங்குஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே
 ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான      (44)

ஆ. மொ.

இல.

He may also wonder here and there mistaking some for her sign in the place of meeting.

இளம்.

இதுவுமது.