பக்கம் எண் :

களவியல் சூ. 44 471

(இ-ள்) : அவ்வவ்விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவி மாட்டு உண்டு, ஓங்கிய சிறப்பினையுடைய ஒரு பக்கத்து என்றவாறு.

ஒரு சிறையென்றது மனத்தானும் மொழியானும் மெய்யானும் கற்புடை மகளிர் ஒழுகும் ஒழுக்கத்தின் மனத்தான் ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு.

நச்.

இது தலைவனும் அல்லகுறியால் வருந்துவனென்கின்றது.

(இ-ள்) : ஓங்கிய சிறப்பின்-தனது மிக்க தலைமைப்பாட்டினாலே பொழுதறிந்து வாராமையின், ஒரு சிறை ஆன ஆங்குதான் குறிசெய்வதோரிடத்தே தன்னானன்றி இயற்கையான் உண்டான அவ்வல்ல குறியிடத்தே, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு-தலைவியுந் தோழியுந் துன்புறுமாறு போலத் தலைவனுந் துன்புற்று ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு.

முன்னர் நின்ற ‘ஆங்கு’ முன்னிற் சூத்திரத்து அல்ல குறியைச் சுட்டிற்று, பின்னர் நின்ற ‘ஆங்கு’ உவம உருபு.

(உ-ம்)

“தாவில் நன்பொன் தைஇய பாவை
விண்டவ ழிளவெயிற் கொண்டுநின் றன்ன
மிகுகவி னெய்திய தொகுகுர லைம்பாற்
கிளையரி நாணற் கிழங்கு மணற்கின்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்
நயவன் றைவருஞ் செவ்வழி நல்யா
ழிசையோர்த் தன்ன வின்றீங் கிளவி
யணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற்
றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற்
பெறலருங் குரைய ளென்னாய் வைகலு
மின்னா வருஞ்சுர நீந்தி நீயே
யென்னை யின்னற் படுத்தனை மின்னுவசிப்
புரவுக்கால் கடுப்ப மறலி மைந்துற்று
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப்
படைநிலா விலங்குங் கடன்மரு டானை