பக்கம் எண் :

472தொல்காப்பியம்-உரைவளம்

மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
யோங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய
நீர்மா ணெஃக நிறுத்துச்சென் றழுந்த
கூர்மத னழியரோ நெஞ்சே யானாது
எளிய ணல்லோட் கருதி
விளியா வெவ்வந் தலைத்தந் தோயே” 1      (அகம்-212)

“வடமலை மிசையோன் கண்ணில் முடவன்
றென்றிசை யெல்லை விண்புகு பொதியிற்
சூருடை நெடுஞ்சுனை நீர்வேட் டாங்கு
வருந்தினை வாழியெ னுள்ளஞ் சாரற்
பொருதுபுறங் கண்ட பூநுத லொருத்தல்
சிலம்பிழி பொழுதி னத்தம் பெயரிய
வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக்
கல்லக வெற்பன் மடமகண்
மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே” 2


1. கருத்து: நெஞ்சமே! பொன்பாவை இளவெயிலில் இருந்தது போன்ற மேனியழகும், ஐம்பாலும், முள்எயிறும், இனிய சொல்லும், வருத்துதலும் உடைய அரிவையை பெறாமல் களிறுகள் படியக் கலங்கும் நீர் போல நீ கலக்கம் அடைந்தபொழுது அவள் பெறுதற்கரியள் என்று கருதாமல் கொடிய அரிய சுரவழியிடத்தை நீந்தி வந்து என்னைத் துன்பப்படுத்தினாய். எளியவளல்லாத அவளையே நினைந்து மீளாத் துயரில் என்னை ஆழ்த்தினாய். அதனால் நீ குட்டுவனது வேல் நின்மார்பில் அழுந்த நின் வலியழிவதாக.

2. கருத்து: பிற விலங்குகளைப் பொருது புறங் கண்ட எருதினைக் கொண்டு மலையின் இழியும்போது வழிபெயர்ந்த புலியானது அடுக்கத்தில் ஒடுங்கும்படியான கானக வெற்பன் மடமகளாகிய மெல்லியலின் அழகிய முலையில் முன்னம் துயில் கொண்ட நெஞ்சமே! வட மலையில் உள்ள கண்ணில்லாத முடவன் தென்திசைப் பொதியில் உள்ள வானைத் தோயும் உச்சியில் உள்ள சூர்மகள் காக்கும் சுனைநீரை வேட்டதுபோல அவளைப் பெற இக்குறியிடம் வந்து வருந்தினாய் வாழி.