பக்கம் எண் :

கற்பியல் சூ. 647

வாறு காண்க. அம்மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் ஈண்டுக் கூறியுணர்க.

(உ-ம்)

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனுமில”      (குறள்-1100)

“கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது”1      (குறள்-1092)

இதனை நான்கு வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க.

(உ-ம்)

“பானலந் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையாற் கொண்டெடுத்த - கானற்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண்ணோக்கங்
கடிபொல்லா வென்னையே காப்பு”2      (திணை-நூற்-32)

இனி, முயங்கி மகிழ்ந்து கூறுவன.

“கோடலெதிர் முகைப் பசுவீமுல்லை
நாறிதழ்க் குவளையோடிடைப் படவிரைஇ
யைது தொடை மாண்ட கோதை போல
நறியணல்லோண் மேனி
முறியினும் வாயது முயங் கற்குமினிதே”3      (குறுந்-62)

“தம்மிலிருந்து தமது பாத்துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு”.4      (குறள்-1107)


1. கருத்து: அவள் கண்ணில் உள்ள என்னைக் களவு கொண்டு பார்க்கும் சிறிய நோக்கம் காமப் புணர்ச்சிக்கு உடன்படும் பாதியளவினதன்றி முழுமையும் உடையதாகும்.

2. பொருள் முன்னர் எழுதப்பட்டது. பக். ல் காண்க.

3. பொருள்: காந்தள் மலர் முல்லையரும்பு குவளை மலர் ஆகியவற்றை இடையிடை வைத்துத் தொடுக்கப்பட்டமாலை போலும் நல்ல மணமுடைய நல்லவளாகிய இவளின் மேனி தளிர் போலாயது; முயங்குதற்கும் இனி தாய் அமைவது-இது தலைவன் கூற்று.

4. தலைவன் கூற்று: தம் உழைப்பால் அமைத்த இல்லில் இருந்து கொண்டு தாம் ஈட்டிய பொருளைப் பிறர்க்குப்