பக்கம் எண் :

களவியல் சூ. 46 477

இனிக் களவில் ஒருவழித் தணத்தல் என்பது ஒரு பிரிவுண்டு. அதற்குக் காரணம் கூறப்படவில்லை. ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுத் தலைவன் தலைவியைக் காண வருதல் சில நாள் தடைபடுதல் உண்டு. அக்காரணங்களுள் ஓரை (விளையாட்டு) நாள் (விழா) எனும் காரணங்களும் அமையலாம். அதனால் வெள்ளைவாரணனார் கூறியவுரையையும் இரட்டுற மொழிதலாற் கொள்ளலாம் என்றாலும். ஒரு வழித் தணத்தற்பிரிவு ஒன்றிரண்டு நாள்களில் நிகழ்வதில்லை. பல நாள்களாக அமைவது. ஆதலினாலும், களவொழுக்கத்திற்கும் தலைவனுக்கு அவை நிகழும் காலம் முன்னரே அறியவருமாதலின் தலைவியிடம் சொல்லியே செல்வன் ஆதலினாலும் அவ்வாறு விழாவும் விளையாட்டுப் பற்றிப் பிரிந்ததாகச் சங்கச் செய்யுள்கள் காணப்படாமையாலும் அவர் கருத்து கருதி ஆய்தற்குரியது.

134. ஆறினது அருமையும் அழிவும் அச்சமும்
 ஊறும் உளப்பட அதனோ ரற்றே      (46)

ஆ. மொ.

இல.

Difficulty of the route, disheartening, fear, and obstacles also need not deprive of him play and festival with his lady-love.

இளம்.

இதுவும் அது.

(இ-ள்) : நெறியினது அருமையும் மனன் அழிவும் அஞ்சுதலும் இடையூறும் தலைவன் மாட்டு நிகழா என்றவாறு.

நச்.

இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது.

(இ-ள்) : உளப்பட-நிலவும் இருளும் பகைவரும் போல்வன பற்றிச் செலவழுங்குதல் உளப்பட, ஆறினது அருமையும்-நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்தவழிக் கூறுதலும், அறிவும்-குறைந்த மனத்தனாதலும், அச்சமும்-பாம்பும் விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும், ஊறும்-அக்