பக்கம் எண் :

478தொல்காப்பியம்-உரைவளம்

கருமத்திற்கு இடையூறு உளவாங்கொலென்று அழுங்குதலும், அதனோரன்ன-கிழவற்கு இல்லை என்றவாறு.

கிழவற்கில்லையெனவே கிழத்திக்குந் தோழிக்கும் உளவாயிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க.

வெள்.

இதுவும் தலைமகனுக்குரியதோர் இயல்புணர்த்துகின்றது.

(இ-ள்) : நெறியினது அருமையும் மனன்அழிவும் அச்சமும் இடையூறுகளும் உட்பட உளவாகும் தடைகள் காரணமாகத் தான் மேற்கொண்டுள்ள களவொழுக்கத்தினைத் தவிர்தலும் தலைவனுக்கில்லை, என்றவாறு.

ஆறினது அருமையாவது நடத்தற் கியலாதவாறு ஏற்றிழிவும் பரலும் முள்ளும் புதரும் புனலாறும் செறிந்தவிருளும் உடைய அரிய வழியனதாதல். அழிவு-மனன்அழிவு, சோம்பல், அச்சம்-ஆடவனுக்கு ஏலாத அச்சவுணர்வு. ஊறு-கொடிய விலங்கு முதலியவற்றால் வழியிடையே உளவாம் இடையூறுகள். உளப் பட-இவை காரணமாக ஆற்றின தருமையும் அழிவும் அச்சமும் ஊறும் காரணமாக. மறைந்த ஒழுக்கத்தினைத் துறந்து தலைமகளைக் களவிற் காணாறு தவிர்தல் தலைவனுக்கு இல்லை என்பார், ‘அதனோரற்றே’ என்றார். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் ஆற்றினது அருமை முதலிய தடைகளை எண்ணித் தன் ஆருயிர்க் காதலியாகிய தலைவியைக் கண்டு அளவளாவும் காதற் கேண்மையினைத் தவிர்வான் அல்லன் என அவனது காதற் கடமையினை வற்புறுத்தும் முறையில் அமைந்தது இந் நூற்பாவாகும்.

தந்தை முதலியோர் களவறிதல்

135. தந்தையும் தன்ஐயும் முன்னத்தின் உணர்ப      (47)

ஆ. மொ.

இல.

The father and the elder-brother will know her secret lover by inference.