இளம். என்றது தந்தையும் தன்னைமாரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : தந்தையும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு. எனவே, கூற்றினான் உரைக்கப் பெறார் என்றவாறு. நச். இது தந்தையுந் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது. (இ-ள்) : தந்தையுந் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக் கொண்டுணர்வர் என்றவாறு. நற்றாய் அறத்தொடு நின்ற வழியும், “இருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை” (கலி-39) என்றலின் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டு உணர்ந்தாராயிற்று. 136. | தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும் (48) |
ஆ. மொ. இல. Knowing by her mother is as by the faster-mother. இளம். என்றது, நற்றாய்க்கு உரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : நற்றாய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுதலல்லது தந்தையையும், தன்னையன்மாரையும் போல வெகுடலிலள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின், |