பக்கம் எண் :

480தொல்காப்பியம்-உரைவளம்

“காமர் கடும் புனல்’ எனத் தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள்,

“அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க் குய்த்துரைத் தாள்யாய்”      ;(கலித்-39)

எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது.

“அவரும் எதிரிகளை நோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி”      (கலி-39)

என்றதனான் வெகுட்சி பெற்றாம்.

நச்.

இது தந்தை தன்னைக்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்து மாறு கூறுகின்றது.

(இ-ள்) : தாய் அறிவுறுதல்-நற்றாய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந்தன்மை, செவிலியோடு ஒக்கும்-செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் என்றவாறு.

என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்ற வாறாயிற்று, அது,

“எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் குற்றுரைத்தாள் யாய்1       (கலி-39)

என்பதனால் உணர்க.

இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல உணரு மென்று பொருள் கூறில் ‘தாய்க்கும் வரையார்’ (116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம்.

களவு வேளிப்படத் தலைவன் காரணன்

137. அம்பலும் அலரும் களவு வெளிப் படுத்தலின்
  அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும்      (49)

ஆ. மொ.

இல,

AS the talk of some or the talk of many about the love-affair makes known the secret love, the cause for such talk devolves upon the lover.