வெள். இது களவு வெளிப்படுதற்கு காரணமாவார் இவர் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) : இரவினும் பகலினும் வந்து செல்லும் தலைவனைக் கண்டு புலப்படுத்தும் அம்பலும், இன்னானோடு இன்னாளிடையது நட்பு எனச் சொல்லால் விரித்துரைப்பதாகிய அலரும் காதலர் இருவரது களவொழுக்கத்தினைப் பலரும் அறிய வெளிப்படுத்தலால் அத்தகைய களவு வெளிப்படுத்தற்குக் காரணமாவான் தலைவனே, எ-று. அம்பல்-அரும்பல், மகளிரது முகக் குறிப்பினால் களவொழுக்கம் அரும்பு போன்று சிறிது வெளிப்படுதல். அலர் - அலர் போன்று கூற்றினால் விரிந்து வெளிப்படுதல். அங்கு அதன் முதல்வன்-அந் நிலையில் அக்களவின் வெளிப்பாட்டிற்குக் காரணமாவான். முதல்-காரணம். அம்பலும் அலரும் தோன்றிய பின்னல்லது இம் மறை வெளிப்படாதாதலின், இக் களவு வெளிப்பாட்டிற்குத் தலைவனே காரணம் ஆவான் என்பது கருத்து. அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் எனவரும் இத் தொல்காப்பியத் தொடரை அம்பலும் அலரும் களவு (22) எனவும், ‘வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி’ எனவும் இரண்டு சூத்திரங்களாக இறையனார் களவியல் ஆசிரியர் அமைத்துக் கொண்டுள்ளார். வரைதல் வகை 138. | வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று | | ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே (50) |
ஆ. மொ. இல. The way of marriage is of two kinds; the marriage after the secret love is known and the marriage before it is known. |