“எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே” (அகம்-195) என்றாற் போல்வன வெளிப்படுவதன் முன்னர்க் கொண்டு தலைக்கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரணம் நிகழ்ந்தமையின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம். களவில் பிரிவு 139. | வெளிப்படை தானே கற்பினொடு ஒப்பினும் | | ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருள்ஆக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை (51) |
ஆ. மொ. இல. Though the love being known publicly is to be consi-dered as equal to the wedded love, the lover will not have the right of parting with her for the sake of three aims mentioned above before the celebration of the marriage. இளம். இது தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : களவு வெளிப்படுதல் கற்பினோடொப்பினும் மேற் சொல்லப்பட்ட மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை என்றவாறு. அவையாவன முற்கூறிய ஓதற்பிரிவும், பகைவயிற்பிரிவும் தூதிற்பிரிவும். எனவே பொருள்வயிற்பிரிதலும் வேந்தர்க்
என்றதால் தலைவியுடல் மெலிவு காணாமல் மறைத்தாள் என்பதும் அதனால் ஊரவர் இவர் களவையறிந்திலர் என்பதும் புலனாகும். இது தலைவி தோழியிடம் மணந்து இல்லறம் நிகழ்த்தும் காலத்தில் கூறியதாம். |