பக்கம் எண் :

களவியல் சூ. 51 485

குற்றுழிப்பிரிதலும் காவற் பிரிதலும் நிகழப்பெறும் என்றவாறாம்.

நச்.

இது முதற் கூறிய வரைவு நிகழ்த்தாது பிரியும் இடம் இது வெனவும் பிரியலாகாவிடம் இதுவெனவுங் கூறுகின்றது.

(இ-ள்) : வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்-முற்கூறிய வெளிப்படைதானே கற்பினுள் தலைவி உரிமை சிறந்தாங்கு அருமை சிறந்து கற்போடொத்ததாயினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக-முற்கூறிய ஓதல் பகை தூதென்ற மூன்றும் (25) நிமித்தமாக, வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை-வரைவிடை வைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை என்றவாறு.

மூன்றுமென முற்றும்மை கொடாது கூறினமையின் ஏனைப் பிரிவுகளின் வரையாது பிரியப்பெறும் என்றவாறாயிற்று. அவை வரைதற்குப் பொருள்வயிற்பிரிதலும் வேந்தற்குற்றுழியும் காவற்குப்பிரிதலுமென மூன்றுமாம்.

(உ-ம்)

“பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதைய
டிணிமண லடைகரை யலவ னாட்டி
யசையின ளிருந்த வாய்தொடிக் குறுமக
ணலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
பெறலருங் குரைய ளாயி னறந்தெரிந்து
நாமுறை தேஎ மரூஉப்பெயர்ந் தவனோ
டிருநீர்ச் சேர்ப்பி னுப்புட னுழுதும்
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தன மடுத்தன மிருப்பிற்
றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்