பக்கம் எண் :

486தொல்காப்பியம்-உரைவளம்

தேனிமி ரகன்கரைப் பகுக்குங்
கானலம் பெருந்துறைப் பரதவன மக்கே”      (அகம்-280)

இதனுள், ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரிய ளாயின் தன்னை வழிப்பட்டால் தந்தை தருவனோ? அது நமக்கு அரிதாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைதுமெனப் பொருள்வயிற் பிரியக் கருதியவாறு காண்க.

“பூங்கொடி மருங்குற் பொலம்பூ ணோயே
வேந்து வினைமுடித்து வந்தனர்
காந்தண் மெல்விரற் கவையினை நினைமே”      (அகம்)

இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தான் வரைவு மலிந்தமை தோழி கூறியது,

ஏனைய வந்துழிக் காண்க.

ஓதுதற்கு ஏவுவார் இருமுது குரவராதலின் அவர் வரையாமற் பிரிக வென்றார்.

பகைவென்று திறைகோடற்குப் பிரியுங்கால் அன்புறு கிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது தூதிற்கும் ஒக்கும்.

மறை வெளிப்படுதல் கற்பென்று (499) செய்யுளியலுட் கூறுதலின் இதனை இவ்வோத்தின் இறுதிக் கண் வைத்தார். கற்பினோடொப்பினும் பிரிவின்றெனவே கற்பிற்காயிற் பிரிவு வரைவின்றாயிற்று.

வெள்.

இது தலைமகனுக்குரியதோர் இயல்பு உணர்த்துகின்றது.

(இ-ள்) : களவு வெளிப்பாடு கற்பியல் வாழ்க்கையோடு ஒப்பதாயினும் முன்னர்க் கூறப்பட்ட ஓதல், பகை, தூது என்னும் இம்முன்றும் காரணமாகத் தலைவியை மணந்து கொள்ளாது நெட்டிடைப் பிரிந்து செல்லுதல் தலைவனுக்குரிய செயலாதல் இல்லை, எ-று.