சிவ. இருவர் உணர்வும் ஒருவர் ஒருவர்க்குணர்த்திய உணர்வுகளை உணருமானால் அதன் பின்னரே இனிவரும் இயற்கைப் புணர்ச்சிக்கு வேண்டிய வேட்கை, உள்ளுதல் முதலிய நிமித்தங்கள் முறையாக நிகழும் என்பர் புலவர். குறிப்பு என்றது-குறித்துணரும் உணர்வை. ஆங்கவை என்றது பின்னர் நிகழும் புணர்ச்சி நிமித்தங்களை.1 ஆங்கு என்பது அசை நிலை எனினும் ஆம். தலைவன் இயல்பு 95. | பெருமையும் உரனும் ஆடூஉ மேன (7) |
ஆ. மொ. இல. Nobility and courage are the qualities of the Male. பி. இ. நூ. நம்பி. 35. பொருவிறந் தோற்குப் பெருமையும் உரனும் ............................மன்னிய குணங்கள் இல. 404. பொருவிறந் தோற்குப் பெருமையும் உரனும் ...................................மன்னிய குணங்கள் முத்து. கள. 3. பெருமையும் உரனும் ஆடூஉ மேன இளம். என்-எனின், இது தலைமகற்கு உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று.
1. வேட்கை ஒருதலையுள்ளுதல் (6) முதலியவற்றை தொ-4 |