(இ-ள்) : பெருமையாவது - பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது - அறிவு. இவையிரண்டும் ஆண் மகனுக்கு இயல்பு என்றவாறு, இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது, வரைந்து எய்தும் என்பது பெறுதும். “சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பத றிவு” (குறள்-422) என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள் “வேயெனத் திரண்டதோள் வெறிகமழ்வணர் ஐம்பால் மான்வென்ற மடநோக்கின் மயிரியல் தளர்பொல்கி ஆய்சிலம்பு அரியார்ப்ப வளரொளி இழை இமைப்பக் கொடியென மின்னென அணங்கென யாதொன்றும் தெரிகல்லா இடையின்கட் கண்கவர்பு ஒருங்கோட வளமைசால் உயர்சிறப்பின் நுந்தை தொல் வியனகர் இளமையான் எறிபந்தோடிகத்தந்தாய் கேளினி” பூந்தண்தார்ப்புலர் சாந்தின் தென்னவன் உயர்கடல் தேம்பாய அவிழ்நீலத்தலர் வென்ற அமருண்கண் ஏந்து கோட்டெழில்யானை யொன்னாதார்க் கவன்வேலிற் சேந்துநீ யினையையால் ஒத்ததோ சின்மொழி. பொழிபெயல் வண்மையான் அசோகந்தண்காவினுள் கழிகவின் இளமாவின் தளிரன்னாய் அதன்தலைப் பணையமை பாய்மான்தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கணையினு நோய் நெய்தல் கடப்பன்றோ கனங்குழாய் வகையமை தண்தாரான் கோடுயர் பொருப்பின் மேல் தகையிணர் இளவேங்கை மலரன்ன சுணங்கினாய் மதவலி மிகுகடாஅத் தவன்யானை மருப்பினும்
1. பொருள்: மனத்தை அது சென்ற புலத்தின்கட் செல்லவிடாது, அப்புலத்தின் நன்மை தீமை யாராய்ந்து தீயதனின் நீக்கி நல்ல தன்கட் செலுத்துவது அறிவு-பரிமேலழகர். |