தவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை எனவாங்கு இனையனகூற இறைஞ்சுபு நிலநோக்கி நினையுபு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணள். மன்யாங்குப் பெயர்ந்தாளென் அறிவகப்படுத்தே1 (கலித்-57) “உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல் ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று மையீர் ஓதி வாணுதற் குறுமகள் விளையாட்டாயமொடு வெண்மணல் உதிர்த்த
1. பொருள்: தலைவன் பாங்கனிடம் தான் தலைவியைக் கண்டமை கூறியது. இது இயற்கைப் புணர்ச்சியில் மெய்யுறாது உள்ளப் புணர்ச்சியளவில் மீண்ட தலைவன் கூற்று. தோளையும் கூந்தலையும் மடநோக்கினையும் மயிலியலையும் உடையவளாய், சிலம்புப்பரல் ஒலிக்க அணிகள் ஒளிவீச, கொடியோ மின்னலோ தெய்வமோ எனத் தெரிய முடியாத இடையில் என் கண்ணைக் கவர்ந்து நின் தந்தை ஊரில் இளமை காரணமாகப் பந்தைக் கொண்டு ஓடியவளே! சொல்வதைக் கேள். தென்னவன் கூடலில் நீலமலர்போலும் நின் கண்கள், பகைவர்க்கு அத்தென்னவன் வேல் சிவந்தது போலச் சிவத்தல் நல்லதோ. வள்ளலாகிய அப்பாண்டியனின் அசோகந் தண்பொழிலில் இள மாமரத்தின் இளந்தளிர் போலும் மேனியாய்! அத்தென்னவன் பகைவரது உடலிற் பாய்ந்து சிவந்த அம்புபோல எனக்கு நீ துன்பம் செய்தல் கடத்தற்கரியதாம். வேங்கை மலர் போலும் சுணங்ருடையவளே நின் இளமுலை பாண்டியனின் யானை மருப்பினும் வருத்தும் வலியுடையதாம்; இது தக்கதோ. என்றிப்படியான் கூறக் கேட்டு அவள் தலை தாழ்ந்து நிலம் பார்த்து எதையோ நெடிதாக நினைப்பாள் போல் தன் தோழியர் கூட்டத்தில் கலந்து தன் மனையிடம் புக்காள் என் அறிவைக் கவர்ந்து. |