பக்கம் எண் :

52தொல்காப்பியம்-உரைவளம்

புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனைப்புறந் தருதியாயின் ஏனையதூஉம்
இம்மனைக் கிழமை யெம்மொடு புணரில்
தீதும் உண்டோ மாதராயெனக்
கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க
யாந்தற் குறுகினம் ஆக ஏந்தெழில்
அறிவே யுண்கண் பனிவர லொடுக்கிச்
சிறிய இறைஞ்சினள் தலையே
பெரிய எவ்வம் யாமிவணுறவே”1      (அகம்-230)

இவை உள்ளப் புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு உரைத்தன.

நச்.

இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி2, இனி உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து விடும் பக்கமும் உண்டென்பதூஉம்


1. பொருள்: பாங்கனே! கொடிஞ்சி நெடுந்தேரைப் பாகன் மெல்ல இயக்கச் சென்று ‘நெய்தல் மலர் போற் கண்ணும் அல்குலும் சுணங்கும் பல்லும் கூந்தலும் நுதலும் உடைய குறுமகளே! விளையாட்டுத் தோழியருடன் வெண்மணலில் புன்னைப் பூவுதிர்த்த தாதுக்களைப் பொன் எனக் கொண்டு கிளறிப் பின் மனைப் பக்கம் செல்வையாயின் எப்படியும் இம்மனைக்கு நினக்குள்ள உரிமையை என்னோடு கூடிச் சேர்வாய் ஆனால் தீது உண்டாகுமோ என்று சொல்லி யான் அவளைக் குறுகினேன் ஆக அவள் தன் கண்ணில் பனி வருதலைத் தடுத்து சிறிது தலைதாழ்த்தினாள் யான் பெரிய துன்பம் உறும்படியாக. இதுவே நடந்தது.

இதில் புணர்ச்சி நடந்ததாகக் கூறாமையின் உள்ளப் புணர்ச்சியளவில் முதல் நாளிற் பிரிந்தான் தலைவன் என்பது பெறப்படும்.

2. இத்துணையும் கூறப்பட்டன உள்ளப் புணர்ச்சிக்கே யுரியவாய் மெய்யுறு புணர்ச்சிக்கு நிமித்த மாவனவேயன்றி ‘மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே’ எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. -வெள்.