சிவ. களவொழுக்கம் பற்றிக் காட்சி முதலாகவுள்ளவற்றைக் கதை போலப் புலனெறி வழக்காகச் சொல்லிவர எண்ணிக் குறிப்பறிதல்வரை கூறி வந்த ஆசிரியர், தொடர்ந்து மெய்யுறு புணர்ச்சிக்குரிய “வேட்கை ஒருதலையுள்ளுதல்” முதலிய வுணர்வுகளைக் கூறாமல் தலைவன் குணங்களாகப் பெருமையையும் உரனையும், தலைவி குணங்களாக அச்சம் நாணம் மடன் ஆகியவற்றையும் இடையே கூறியதன் நோக்கம், செய்யுள் நெறியையடிப்படையாகக் கொள்ளாமல் உலக வழக்கையடிப்படையாகக் கொண்டு குறிப்பறிந்த மாத்திரத்தே தன்பெருமை உரன் காரணமாக உள்ளப் புணர்ச்சியளவில் நின்று பிரிந்து மணந்து கொள்ள முயல்வதே நன்று என்னும் கருத்தேயாகும். அவளும் அச்சம் நாணம் மடன் காரணமாக மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவோடு பிரிந்து திருமணத்தை வேண்டி நிற்பதே நன்று என்பதும் கருத்தாம். அக் குணங்களையும் விஞ்சிக் காமம் மிக்குப் புணர்ச்சி வேட்கை மீதூருமாயின் வேட்கை ஒருதலையுள்ளுதல் முதலிய புணர்ச்சி நிமித்தங்கள் நிகழும் என்க. தலைவியியல்பு 96. | அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்’1 | | நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (8) |
ஆ. மொ. இல. They say that fear, shyness and simplicity (in appear-ance) are predominantly the qualities of the female. பி. இ. நூ. நம்பி. 35. நன்னுதற் கச்சமும் நாணமு மடனும் மன்னிய குணங்கள்
1. முந்துறுத்த-நச். பாடம். |