பக்கம் எண் :

களவியல் சூ. 855

இல. 404.

நன்னுதற் கச்சமும் நாணும் மடனும்
மன்னிய குணங்கள்.

முத்து. 832.

அச்சமு நாணு மடனு முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.

இளம்.

என்-எனின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : அச்சமும், நாணும், பேதைமையும் இம் மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு,

எனவே வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டு1மென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப் புணர்ச்சியால் நின்று வரைந்தெய்தி மெய்யுறும்.2 இதற்குச் செய்யுள்,

“தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பின் பிணைத்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப்பாங்கரு
முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம்
புல்லினத்தாயர் மகளிரோடெல்லாம்
ஒருங்கு விளையாட அவ்வழிவந்த
குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் மற்றென்னை
முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ
பெற்றேம் யாம்மென்று பிறர் செய்த இல்லிருப்பாய்
கற்றதிலை மன்றகாண் என்றேன் முற்றிழாய்
தாது சூழ் கூந்தல் தகைபெறத்தைஇய


1. வரைந்தெய்துதல் வேண்டும்-வரைந்தெய்துதலை விரும்புவள்.

2. மெய்யுறும்-மெய்யுறுவள் எனப் பொருள் கொள்க. இருவரும் மெய்யுறும் என்பது பிழை. ‘மெய்யுறுப’ எனப்பாடம் இருப்பின் நன்று.