கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்த பூக்கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யிலெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிதும் மையலை மாதோ விடுகென்றேன் தையலாய் சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவன்நீ ஆயர் மகளிர் இயல்புரைத்தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவைமன்”1 (கலித்-111) இது தலைமகள் உள்ளப் புணர்ச்சியின் உரிமை பூண்டிருந்த வாறும் வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. நச். இது, மேலதே போல்வதோர் விதியை உள்ளப்புணர்ச்சி பற்றித் தலைவிக்குக் கூறுகின்றது.
1. பொருள்: தோழீ! மனைத் தோட்டத்தில் ஆய மகளிர் எல்லாருடனும் விளையாடிய பொழுது ஒரு பொதுவன் வந்து மடநல்லாய் நீயாடும் இற்றில் புனையட்டுமா என்றான். அதற்கு யான், ஏடா! என்னை மணந்து வீடு கட்டித் தருவது அறியாம் இவள் தந்தையின் வீட்டில் இருக்கப் பெற்றேன் என்றிருக்கும் நீ உலகியல் அறியாய் என்றேன். அவன் மாயையை நின் கூந்தலில் புனைவேனோ என்றான். நான் அதற்கு, நீ மற்றவர் தந்த பூவைப் புனைவேனோ என்றாய் நீ தந்த பூவைப் புனைதலை அறியாய் என்றேன். அவன் மார்பில் தொய்யில் எழுதுவேனோ என்றான். அதற்கு நீ என்னை மணந்து கொண்டு வெளிப்படையாக எழுதுதல் வேண்டும் என்பதை என்பது நின் மனத்தில் இல்லை எவ்வளவுகால் எம் சுற்றத்தார் கோலம் செய்தலைப் பார்த்திருப்பேன், நீ பெரிது மயக்கம் உடையை என்றேன். இப்படியான் மறித்துக்கூற அவன் இனிக் கள வொழுக்கம் நிகழாது என எண்ணி அலமந்தான் போலப் போனான். தோழியே! நீ அவனுக்கு ஆயமகளிரை மணக்கும் முறையை யறிவித்துத் தந்தையும் தாயும் இக் களவொழுக்கத்தை அறியும்படி அறத்தொடு நிற்பாயேயானால் அவன் கொண்ட துயரோடு யான் உற்ற துயரையும் களைந்தாய் ஆவாய். |