எனவே, இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்பட்ட தலைமகனும் தலைமகளும் தமக்கைக் காவாது வேட்கை மீதூர்ந்த நிலையிற் புனலோடும் வழிப் புற்சாய்ந்தாற் போலத் தமக்குரிய இயல்புகளை நெகிழ விடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது உள்ளப் புணர்ச்சியளவே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடுதல் முறையாகும் என்பது இளம்பூரணர் கொண்ட கருத்தாகும். இயற்கைப் புணர்ச்சியின் முன் நிகழ்வன 97. | வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் | | ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிச்1 சிறப்புடை மரபினவை களவு என மொழிப (9) |
ஆ. மொ. இல. It is said in the act of love-matcing the following features are quite natural:- Ardent desire, brooding, Pining, Consolation, Breaking the limit of modesty, suspecting others as if they know their love affairs, delusion of seeing actions of their partner everywere, Forgetfulness, swooning and death. பி. இ. நூ. நம்பி. 36 காட்சி முதலா சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கைவரும் எனினே மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே இல. 405. காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
1. என்றச்-பாடம், |