முதலியவற்றை மறத்தல், மயக்கம்-செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றோடு கூறல், சாக்காடு -மடலேறுதலும் வரைபாய்தலும் போல்வன கூறல், என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப-என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்கமென்று கூறுப என்றவாறு. இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற்கூறினார். சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன, ஆக்கஞ் செப்பல், தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரைத்தலும் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணுவரையிறத்தல். களவதிகாரமாதலின் ‘அவை’ யென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும். கையுறை புனைதலும் வேட்டை மேலிட்டுக் காட்டுத் திரிதலுந் தலைவற்கு மறத்தல். கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன. “அணிற் பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழன்ன மாநீர்ச் சேர்ப்ப விம்மை மாறி மறுமையாயினு நீயாகிய ரென்கணவனை யானாகியர் நின் னெஞ்சு நேர்பவளே”1 (குறுந்-49) “நிறைந் தோர்த்தேரு நெஞ்சமொடு குறைந்தோர்ப் பயனின் மையிற் பற்று விட்டொரூஉ நயனின் மாக்கள் போல வண்டினஞ் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
1. கருத்து: சேர்ப்பனே! இம்மை மாறி மறுமைப் பிறப்பு உண்டாயினும் அப்பிறப்பில் நீயே என் கணவனாதல் வேண்டும் யானே நின்நெஞ்சுக்கு உகந்தவளாதல் வேண்டும். இது தலைவனுடன் புணர்ச்சி பெறாது நீண்ட காலத்துத் தலைவி அவனிடம் கூறியது. கால நீட்டிப்பு சாக்காடனைய துயர் தருதலின் இவ்வாறு கூறினாள். |