பக்கம் எண் :

களவியல் சூ. 963

மையன் மானின மருளப்பையென
வெந்தாறு பொன்னினந்தி பூப்ப
வையறி வகற்றுங் கையறு படரோ
டகலிரு வானமம்ம மஞ்சினம்
பகலாற்றுப்படுத்த பழங் கண்மாலைக்
காதலற் பிரிந்த புலம்பினோதக
வாரஞ ருறுநரரு நிறஞ் சுட்டிக்
கூரெஃ கெறிஞரினலைத்தலானா
தெள்ளற வியற்றிய நிழல் காண்மண்டிலத்
துள்ளூ தாவியிற் பைப் பயநுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்
திதுகொல் வாழி தோழி யென்னுயிர்
விலங்கு வெங்கடு வளியெடுப்பத்
துலங்குமாப் புள்ளிற் றுறக்கும் பொழுதே”.1      (அகம்-71)

இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவனெக் கூறுதன் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடைய வெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் ‘மரபினவை’ யெனப் பன்மை கூறினார்.

சிவ.

இச்சூத்திரம் களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலியவற்றுக்கு முன்னர் நிகழும் இருவர் உணர்வுகளையும் கூறுகின்றது.


1. கருத்து: தலைவி தோழியிடம் கூறியது. தோழீ! இயல்பாகவே துன்பம் தரும் மாலையானது, காதலனைப் பிரிந்த தனிமையால் மேலும் துன்புறும்படி, புண்ணால் துயருறுவார் மார்பில் குறிவைத்துக் கூரிய வேலை யெறிவது போல அலைக் கழித்தல் அடங்காது; அதனால் என் உயிர், சூறாவளிக் காற்று வீச மரத்தினின்றும் எழும் புள்ளினைப்போல் என் உடம்பினைத் துறக்கும் போது கண்ணாடி மண்டிலத்து ஊதியபோது படியும் ஆவி மெல்ல மெல்லச் சுருங்குவது போல மிக அழிந்து தன் வலிமை குறையும். இதுவே என் இப்போதைய நிலை.