பக்கம் எண் :

களவியல் சூ. 1065

ஆக்கம் செப்பல் - இடையிடையே நிகழும் நிகழ்ச்சிகளை இடையூறான நிகழ்ச்சிகளாயினும் தம் உணர்வுகளுக்கும் செயல் களுக்கும் ஆக்கமாகவே கருதிக் கூறுதல்.

நாணுவரை யிறத்தல் - பழிபாவங்களுக்கு மடங்குவதாகிய நாண உணர்வு கைக்கொள்ளுமளவும் கொண்டிருந்து காமமிகும் போது அதைக் கடத்தல்.

நோக்குவ எல்லாம் அவையே போறல் - பார்க்கப்படும் பொருள்கள் யாவும் தலைவியுறுப்புகளாகத் தோன்றக் காணுதல். அதுபோலத் தலைவியும், தோன்றும் பொருள் யாவும் தலைவனை நினைவுபடுத்துவனவாகவே காணுதல்.

மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்.

மயக்கம் - செய்வதறியாது புள் முதலியவற்றோடு மயங்கிக் கூறல்.

சாக்காடு - சாதற்குரிய நிகழ்ச்சிகளை மேற்கொள்வதாகக் கூறல் - அது மடலேறுதல், வரைபாய்தல் போல்வது.

இனி நோக்குவ எல்லாம் அவையே போறல் என்பதற்கு நச்சினார்க்கினியர், “பிறர் தம்மை நோக்கிய நோக்கம் எல்லாம் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவாற்றை அறிந்து நோக்குகின்றார் என்று திரியக் கோடல்” என்பர். அது பொருந்தாது. அப்படிக் கொள்ளின் இருவர் பாலும் அச்சம் தோன்றிப்புணர்ச்சிக்கு இடையூறாம்.

தலைவன் செயல்

98. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
 நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ1
அந்நிலை அறிதல் மெலிவுவிளக் குறுத்தல்
தன்னிலை2 உரைத்தல் தெளிவுஅகப் படுத்தல்என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்      (10)

ஆ. மொ.

இல.


1. உறாஅது-பாடம் 2 தந்நிலை-பாடம்

தொ.-5