In the course of love advances, the lovers indulge in addressing all. requesting all, to pay heed to their words, expressing great desire, without much joy knowing the situation, explaining the reason for the pining, exclaiming about fate and making assurances-so say the poets* இளம். என்-எனின், இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. தனியனாய் தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் அறிவும் நீக்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைமகள் மாட்டு நிற்கும் அச்சமும் நாணும் மடனும் நீக்குதலும்1 வேண்டுமன்றே. அவை நீக்குதற் பொருட்டு2 இவையெல்லாம் நிகழுமென்பது உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மையாகவும், “சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி”3 (தொல்-களவியல்-11) என ஓதுதலின் இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கை மிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க. (இ-ள்) : முன்னிலையாக்கல் என்பது-காமக் குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சார நினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையளாயினும் குலத்தின் வழி
*The commentator, Naccinarkiniyar says that these are the expressions of the lover after his meeting with his love in secret and after having intercourse with her. But in the original text there is nothing to suggest such views. So these are to be considered as themes common to both the lover and the loved. Ilampuranar is of the view that these occur before the natural union takes place. 1. நீங்குதலும் - பாடம் 2. நீங்குதற் பொருட்டு-பாடம் 3. வல்லே பெற்றுழி - முன்னிலையாக்கல் முதலியன இன்றிக் காமம் காரணமாக மெய்யுறு புணர்ச்சியை விரைவாகப் பெற்றவிடத்து. |