பக்கம் எண் :

களவியல் சூ. 1067

வந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் மீதூர அக் குறிப்பில்லாதாரைப்போல் நின்றுழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல்.

“ஒள்ளிழை மகளிரோடோரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்
யாரையோ நின்தொழுதனம் வினவுதும்
கண்டார் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ
இருங்கழி மருங்கின் நிலைபெற்றனையோ
சொல் இனி மடந்தை என்றனென் அதன்எதிர்
முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே1”      (நற்றிணை-155)

சொல்வழிப்படுத்தலாவது-தான் சொல்லுகின்ற சொல்லின்வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்.

“சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவுநாறு வேழத்தின்
தலைமருப் பேய்ப்பக் கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவஅல்ல நண்ணார்
ஆண்டலை மதிலராகவும் முரசுகொண்டு
ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்


1. பொருள். தோழியருடன் பாவை கொண்டாடும் விளையாட்டையும் ஆடாமல் நெய்தற்பூ மாலையும் புனையாமல் விரிந்த பூங்கானலிடத்து ஒரு பக்கத்து நிற்பவளே! நீ கடற்கரைப் பெண் தெய்வமோ உப்பங்கழியிடத்து ஆட்சி பெற்றவளோ யார் நீ சொல் நின்னைத் தொழுது கேட்கின்றேம் என்று கூறிய அளவில் அவள் சிறிது முறுவலித்தாள் கண்களில் பனியும் படர்ந்தது.