பெரும் பெயர்க் கூடல் அன்னநின் கரும்புடைத்தோளும் உடையவால் அணங்கே” 1 (நற்றிணை-39) நன்னயமுரைத்தலாவது - தலைமகளினது நலத்தினை யுரைத்தல். “சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய் சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய் ஊர்திரை வேலி யுழக்கித் திரிவாள் பின் சேரல் மடவன்னஞ் சேரல் நடையொவ்வாய்”2 (சிலப்-கானல்-23) நகைநனியுறாஅ அந்நிலையறிதலாவது-தலைமகன் தன் நன்னய முரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறந்தோன்றும் முறுவற்குறிப்பு மிக்குத் தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல். “மாண் இழை பேதை நாறிருங் கூந்தல் ஆணமும் இல்லாள் நீர் உறை சூருடைச் சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல் நொதுமல் நோக்கைக் காண்மோ நெஞ்சே வறிதால் முறுவற் கெழுமிய நுடங்குமென் பணைவேய் சிறுகுடியோளே”3
1. பொருள்: பெண்ணே! நான் நின்னைத் தழுவிச் சில சொல்லின் அவற்றை ஏற்காமல் முகம் கவிழ்ந்து நாணுகின்றாய். திடீரெனக் காமம் அளவிறப்பின் என்னால் தாங்குதல் எளிதோ? புலியைக் குத்திக் கடைப்பகுதி சிவந்த யானைக்கோடு போன்ற நின்கண்களும் சினவா நின்றன. அவை மட்டுமல்ல பாண்டியனின் கூடல் போன்ற வளமிக்க நின் தோள்களும் என்னை வருத்துதல் உடையன் காண். 2. பொருள்: மட அன்னமே! ஊரும் அலை கடலாகிய வேலியை உழக்கித் திரியும் அப்பெண்ணின் பின்னே சேராதே; ஏன் எனின் அவள் நடையை ஒத்திராய். 3. கருத்து: நெஞ்சே! சிறிது முறுவல் பொருந்திய சிறு குடியோள் பேதையாக கூந்தலுடையளாய் ஆணம் இல்லாதவளாய் அச்சம் உடைய இம்மலையின் அணங்காகியிருந்து, நம்மை நோக்கும் நோக்கம் நொதுமல் நோக்கமாக இருப்பதைக் காண்போம், |