பக்கம் எண் :

களவியல் சூ. 17

பெரியீரெனச் சேட்படுத்த வழிக் கூறியது;

“கூறுவம் கொல்லோ கூறலம் கொல்லெனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது
நயந்து நாம்விட்ட நன்மொழிநம்பி
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழுங் கூந்தற் றூவினை
நுண்ணூல் ஆகம் பொருந்தினள் வெற்பி
இளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டு வழிப்படரத் தண்மலர்வேய்ந்து
வில் வகுப்புற்ற நல்வாங்கு குடச்சூல்
அம்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற, பெரிய
அம்மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன்
நேர்மலை நிறைசுனை உறையுஞ்
சூர்மகள் மாதோ என்னுமென் நெஞ்சே”1      (அகம்-118)


ளைப் புணரின் நான் அப்பரதவரிடமிருந்து கயிற்று வலையை வாங்கி வலை வீசி மீன் வளம் கொண்டு இவ்வூர்ச் சிறு குடியினை உண்பிக்க மாட்டேனோ? என்பது அவன் கூற்று. இதனால் யான் பெரியவன் என்ற நிலையில் இன்றி நும் நிலையில் இறங்கி வருவேன் என்றான்.

1. கருத்து: தோழியிற் கூட்டத்துப் பின்னர்த் தலைவன் தனக்குள் சொல்லியது. நான் தோழி மூலம் சொல்லி விட்ட சொல்லை நம்பித் (தலைவியானவள்) தான் கொண்ட காமத்தைச் சொல்வோமோ மாட்டோமோ என மயங்கி மறைத்துக் கொண்டு, மழைத் துளிகளை உள்ளடக்கிய கூந்தலாகிய தூவி உடம்பைப் போர்த் திருக்க நடுயாமத்தில் மழையில் நனைந்த மயில் போல மலையில் சாரலில் தன் காற் சிலம்பு ஒலியையடக்கி வந்து நம்மொடு கூடிச் செல்பவள் மண்ணுலக மடந்தையல்லள்; கவிரம் என்னும் மலை அடுக்கங்களையுடைய பெருமலையில் உள்ள சுனையிடத் துறையும் தெய்வ மகளே எனக் கருதும் என் நெஞ்சம்.