பக்கம் எண் :

களவியல் சூ. 1073

இது நயப்பும் பிரிவச்சமும் வன்புரையுங் கூறிற்று.

“யாயு ஞாயும் யாராகியரோ
வெந்தையு நுந்தையு மெம்முறைக்கேளிர்
யானு நீயும் எவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந் நீர்போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே” 1      (குறுந்-40)

இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது.

“மெல்லிய லரிவை நின்னல்லகம் புலம்ப
நிற்றுறந்தமை குவெனாயி னெற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவாகுக யான் செலவுறு தகவே2      (குறுந்-137)

“அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடுகிளவி
யன்னவாக வென்னுநள் போல3       (அகம்.5-16-8)

இவை தெளிவகப்படுத்தல்.

“அம்மெல்லோதி விம்முற்றழுங்கல்
எம்மலை வாழ்நரிரும் புனம்படுக்கிய
அரந்தின் நவியறுத் துறத்த சாந்தநும்
பரந்தேந் தல்குற் றிருந்து தழையுதவும்
பண்பிற்றென்ப வண்மையதனாற்
பல்கால் வந்து நம்பருவரறீர


1. கருத்து: தலைவீ! என் தாயும் நின் தாயும் யார்? எம் தந்தையும் நின் தந்தையும் என்னவுறவுடையர்? யானும் நீயும் இதற்கு முன்னர் எவ்விடத்துப் பார்த்தறிவோம்? செம்புலமாகிய மலையிடத்து வெவ்வேறிடத்துப் பெய்த மழைநீர் வீழ்ந்து ஓரிடத்துக் கலப்பதுபோல நம் இருவர் நெஞ்சமும் கலந்தன.

2. கருத்து: அரிவையே! நின் நல்லகம் தனிமைப்பட நின்னைப் பிரிவேனாயின் யான் மேற்கொள்ளும் தக்க வாழ்வில் என்பால் இரவலர் வாராத நாள்கள் பலவாகுக.

3. கருத்து: கூடினரைப் பிரிதல் அறநெறியன்று எனக் கூறிய பழஞ்சொல் அப்படி கிடக்கட்டும் என்பவள்போல,