எண்ணி மாற்றமுங் குறியுங் காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறம் ஓச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம். பொழுது கூட்டாமைக்கு நினைந்து இரங்கல். கூடுதலுறுதலாவது-இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும். இதுவரை இயற்கைப் புணர்ச்சியாங் காரணங்கூறி கூடுத லுறுதலால் மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றுக்குச் செய்யுள். “வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு”1 (குறள்-1108) இது கூடுதலுறுதல். பிற வந்துழிக்காண்க. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது-இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ் இன்பந் திளைத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்ற விடத்து. இத் தெய்வப்புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல், கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இரு நான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக. “மெய் தொட்டுப் பயிறல்”, முதலாகக் “கூடுதலுறுதல்” வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி, “சொல்லிய நுகர்ச்சி” முதல் “இரு நான்கு கிளவி” வரை இடந்தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார். அற்றாயின் நுகர்ச்சியும் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ, இடந் தலைப்பாடாமாறு என்னையெனின், நன்று கடாயினாய், மெய்யுறுபுணர்ச்சியினைப் பால் கூட்டும் நெறிவழிப்பட்டு பெற்றார்க்கு மெய்தொட்டுப் பயிறல் முதல், அறு துறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும், இடந்தலைப் பாட்டிற்கும் சேர்ந்த துறையாகலின் பொதுப்பட இரண்டற்கும் நடுவே வைத்துச் செப்பம் ஆக்கினாரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக.
1. கருத்து: ஒருவரை யொருவர் விரும்பும் இருவர்க்கும் காற்று இடையிற்புகுந்து பிளவு படாத முயக்கம் இனிதாகும். தொ-6 |