பக்கம் எண் :

களவியல் சூ. 11 83

“நின்மார் படைதலின் இனிதாகின்றே
நும்மில் புலம்பினும் உள்ளுதொறும் நலியும்”1      (அகம்-58)

என்றது இடந்தலைப் பாட்டில் நேர்ந்த தேற்றம்.

“பேராச் சிறப்பின்” எட்டு என்றல்,

பேரும் சிறப்பின ஆறு என்றலை எடுத்தோத்தாற்2 காட்டி நின்றது.

இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும். ‘வாயில் பெட்பினும்’ என்னுமளவும் பாங்கற் கூட்டம். மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம்.

பெற்ற வழி மகிழ்ச்சியும் என்பது-இடந்தலைப்பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும்.

“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றாள் இவள்”3      (குறள்-1104)

“ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் நீரளா ரணங்கினளே
இனையள் என்றவட் புனையளவு அறியேன்


1. பொருள்: நும்முள் ஏற்பட்ட தனிமையில் நின்னை நினையும்தோறும் (வருந்தும் வாடைக் காற்றில் ஓரிடத்து நின் வருகையை நினைந்து இவள் நிற்கும் நிலையானது) நின்மார்பைப் புல்லுவதினும் இனிமையாகும்.

2. எடுத்தோத்தால்-எடுத்துக் கூறியதால், மெய்தொட்டுப் பயிறல் முதல் தீராத் தேற்றம் வரை எடுத்துக் கூறப்பட்டதால், நுகர்ச்சி, தேற்றம் தவிர்த்த ஆறும் பேரும் சிறப்பின என்க.

3. கருத்து: இவளை நீங்கின் சுடுவதும் நெருங்கின் தண்ணென ஆவதும் ஆகிய நெருப்பை இவள் எங்குப் பெற்றாள்?-தலைவன் கூற்று.