சில மெல்லியவே கிளவி அனைமெல் லியல்யான் முயங்குங்காலே” 1 (குறுந்-70) இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள். பிரிந்த வழிக் கலங்கலாவது-இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்கமுறுதலும் என்றவாறு. “என்றும் இனியளாயினும் பிரிதல் என்றும் இன்னாள் அன்றே நெஞ்சம் பனி மருந்து விளைக்கும் பரூஉக் கண் இளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே”2 எனவரும். இத்துணையும் இடந்தலைப்பாடு. பெற்றவழி மகிழ்தலும் பிரிந்தவழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினுந் தோழியிற் கூட்டத்தினும் நிகழும். நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்பது-காம நுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கோடலும். நிற்பவை-இல்லறவினை. “தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள் தீரா வெம்மையொடு திசை நடுக்கு உறுப்பினும் பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால்
1.கருத்து: நெஞ்சமே! கூந்தலும் நுதலும் உடைய அரிவை யானவள் உடனிருக்கும் போது தண்ணென்னும் தன்மையள்; பிரியுங்கால் வருத்தம் செய்பவள்; அவள் இயல்பை உணர்வதல்லது இப்படிப்பட்டவள் எனச் சொல்ல அறியேன். சில சொல்ல நினைத்தாலும் அவை மெல்லியனவாம். அவள் உடல் இயல்பு அணையுங் காலத்தில் பஞ்சு மெத்தை போலும். அவ்வளவே சொல்ல இயலும்-புணர்ச்சிப் பின்னர்க் கூறியது. 2.கருத்து: நெஞ்சமே! நம்மால் இளமுலையொடு முயங்குதற்குரிய கானவன் பெருமட மகள் கூடும் அப்பொழுது இனியள். பிரியும் அப்பொழுதும் இன்னாதவளாவள். என் செய்வாம்-தலைவன் நெஞ்சொடு கூறியது. |