“முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே கிளைஇய குரல கிழக்கு வீழ்ந்தனவே செறிநிறை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சில தோன்றினவே அணங்குதற்கு, யான்தன் அறிவல் தானறியலளே யாங்கா குவள் கொல்தானே பெருமுது செல்வன் ஒருமட மகளே”1 (குறுந்-337) [இது பாங்கனை நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள் எவ்வியலினள் என்று வினாய் அறிந்தது]. இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள். “இரவினானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்தும் தொண்டித் தண்ணறு நெய்தல் நாறும் பின்னிருங் கூந்தல் அணங்குற்றோரே.2 (ஐங்குறு-173) எனவரும். இச் சூத்திரத்துள் கூற்று வரையறுத்துணர்த்தாமை பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும். பெட்ட வாயில் பெற்றிரவு வலியுறுப்பினும் என்பது-மேற் சொல்லியவாற்றான் உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்தலாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் தோழியை இரந்து பின்நின்று கூட்டக் கூடுவன்
1. பொருள்: அவட்கு முலை முகிழ்த்தன; தலைக் கூந்தல் கீழே தொங்குமளவில் வந்தது; பற்கள் முறையாக விழுந்து நிரம்பி முளைத்தன. பருவத்தை யறிவிக்கும் சுணங்கும் அவளிடம் தோன்றின. என்னை வருத்துதற்கேற்க அறிகுறிகளை யான் அவளிடம் அறிவேன். ஆனால் அவள் அதனையறியாள். என்னாகுவாளோ?-தலைவன் கூற்று. 2. பொருள்: தொண்டியில் உள்ள நெய்தல் மலர் மணம் வீசும் பின்னப்பட்ட கரிய கூந்தலையுடைய இவளால் வருத்தப்பட்டோர் இரவிலும் இனிய தூக்கத்தை யறியாமல் மணியிழந்த நாகம் போல வருத்தம் எய்துவர். |