என்னும் உள்ளத்தனாய் அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு. வலியுறுத்தலாவது, தான் வழிமொழிந்தது யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை. பெட்ட வாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள். “கடல் புக்குயிர் கொன்று வாழ்வர் நின்ஐயர் உடல்புக்குயிர் கொன்று வாழ்வை மன்நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கிடுகு மிடையிழவல் கண்டாய்”1 (சிலப்-கானல்-17) இன்னும் பெட்ட வாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல் என்பதனால் தலைமகள் தான் விரும்பப்பட்ட தோழியாகி எமக்கு வாயில் நேர்வாள் இவள் எனப்பெற்றுப் பின்னிரந்து குறையுற நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள். “தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டு புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப்பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர் அன்னோளே”2 (குறுந்-222) இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்த வழிக் கண்டுகொள்க.
1. கருத்து: நின் தமையன்மார் கடலிற் புகுந்து அங்குள்ள மீன் முதலிய உயிர்களைக் கொன்று வாழ்வர். நீயும் என் உடல் புகுந்து என் உயிரைத் துன்புறுத்தி வாழ்வை. நின்முலை பாரமானது. அது தாங்க மாட்டாது இடை சிறுகும். அதை இழவாதே. 2. கருத்து: மழைக் காலத்து மழைநீர் கொண்ட பித்தி அரும்பின் புறம் போன்ற கண்ணும் மழைத் துளியையேற்ற தளிர்போலும் மேனியும் உடைய நம் தலைவி தன் தோழியர் கூட்டத்துள் அங்குத் தோன்றும் ஒருத்தி |