“கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகை சேர்ஐம்பால் தகை பெறவாரிப் புலர்விடத் துதிர்த்த துகள் படுகூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும் அருளாளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல் மாநெஞ்சே என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிதில்லையான் உற்ற நோய்க்கே”2 (நற்றிணை-140) என்னும் பாட்டும் ஆம். இத்துணையும் பாங்கற் கூட்டம். ஊரும்........பகுதியும் என்பது-ஊராயினும், பேராயினுங், கெடுதியாயினும், பிறவாயினும் நீர்மையினால் தன் குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகுதியும் உண்டு என்றவாறு. அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள்: “அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் கன்று கால் யாத்த மன்றப் பலவின் வேர்க் கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழம் குழவிச் சேதா மாந்தி அயலது
தலைப்புணைக் கொண்டால் தானும் கொள்ளும்; கடைப்புணைக் கொண்டால் தானும் கடைப்புணை கொள்ளும். அவள் புணையை விட்டு நீரில் சென்றால் தானும் புணையைவிட்டு நீரில் சென்றாடும். எனவே அவ் வொருத்தியே அவளுக்கு உயிர்த் தோழியாவாள் என்பது நமக்குப் புலப்படும். 1. பொருள்: நெஞ்சமே! சந்தனத்தோடு பிற நறுமணப் பொருள்கள் கூட்டிய நெய்பூசி உலர்ந்த காலத்துச் சந்தனத் துகள்கள் படியும் படியான கூந்தலும் பெரிய கண்ணும் உடைய தோழியர் கூட்டத்துடன் தந்தையின் தேர் செல்லும் முற்றத்தில் ஆடிப் பந்தொடு பெயரும் அவள் நமக்கு அருளினும் அருளாளாயினும் நமது அரிய துயராகிய துன்பத்தைத் தீர்க்கும் மருந்து அவளன்றிப் பிறிது இல்லையாதலின் நீ அவள் பின் நின்று இரத்தலை முனியாதே. |