பக்கம் எண் :

98தொல்காப்பியம்-உரைவளம்

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்த்தானாயினுங் காவன்மிகுதியானுங், கரவுள்ளத்தானும் இரண்டாங் கூட்டத்தினும் அவள்நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய் மேல்நிகழும் பாங்கற் கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப்பாட்டினும் ஐயுறவு உரித்தென்று மெய் தொட்டுப் பயிறன் முதலியன அதற்குங் கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடையென மூவகைப் படுதலின் அவர்க்கெல்லாம் இது பொதுவிதியாகலானும் அமையும்.

“எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி
யவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென
வரிவண் டார்க்கும் வாய்புகு கடாஅத்த
வண்ணல் யானை யெண்ணருஞ் சோலை
விண்ணுயர் வெற்பினெம் மருளி நின்னி
னகலி னகலுமெ னுயிரெனத் தவலி
வருத்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப்
பிரிந்துறை வமைந்த வெம்புலம்புநனி நோக்கிக்
கவல்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ
வாய நாப்பண் வருகுவன் கொல்லென
வுயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே”,1

இது, வருவான் கொலென்னும் அச்சமும், வாரான் கொல் லென்னுங் காதலுங் கூர்ந்து தலைவி கூறியது.

இனிச் ‘சொல்லிய’ என்றதனானே இன்னும் இப்புணர்ச்சி கூடுங்கொலெனக் கூறுவனவும் இன்னுந் தெய்வந் தருமெனக் கூறுவனவும், தலைவியை எதிர்ப்பட்ட இடங் கண்டுழி அவனாகக் கூறுவனவும் காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்துவனவும் தலைவி தனித்த நிலைமை கண்டு வியப்பனவும் முன்னர்த் தான் நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும்


1. கருத்து: எண்ணரும் யானையுடைய சோலை சூழ்ந்த மலையிடத்தில் நின்னிற் பிரியின் என் உயிர் பிரியும்; என் ஊர் அண்மையில் உள்ளது என்று கூறிய போது அவரைப் பிரிந்து உறைதற்கு அமைந்த என் தனிமையை நினைந்து செல்வோமோ மாட்டோமோ எனக் கவர்த்த நெஞ்சமொடு தன் ஊரிலேயே கவலை கொண்டு தங்கி விடுவானோ. அல்லது நாம் ஆயக் கூட்டத்துடன் இருக்கும் போது களவு புலப்பட வந்துவிடுவானோ என இரு வகையில் வருந்துவன் யான். அதனால் அவன் மாலைதங்கு மார்பை நுகரும் நுகர்ச்சியைப் பெறுவேனாக என எண்ணும் எண்ணம் இயையாதாமோ ஒன்றும் அறியேன்.