பக்கம் எண் :

106தொல்காப்பியம்

எடுத்து உவமை கூறின் அது வழுவாம். ஆமாவெதுபோலுமெனின் ஆப்போலுமென அதனோடொத்த குணமுடையதையே ஒப்புமை கூறுவதன்றி அதனோடொவ்வாதவொன்றை உவமை கூறுதலாகாது. இதுபற்றியே தொல்காப்பியரும் “உவமையும் பொருளும் ஒத்தல்வேண்டும்” (சூ. 283) என்றார். இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கூறுதலே பொருத்தமென்பது எமது கருத்து. பேராசிரியரும் இளம்பூரணரும் வேறு வேறு கருத்துக் கூறுவர். சூத்திரப் போக்குநோக்கிப் பொருந்துவதை ஆராய்ந்துகொள்க.

இனி, உவமையை உவமேயமாகவும், உவமேயத்தை உவமையாகவும் மாறிக் கூறினும் அஃது உவமையாம். எங்ஙனமெனில், “பவளம்போலும் வா” யென்பதை வாய்போலும் பவளமென்று மாறி உவமஞ் செய்யினும், அஃதும் உவமையாகக் கொள்ளப்படும். அங்ஙனம் மாறிக் கூறுங்கால் ஆண்டும் உவமையாக நின்ற உவமேயப் பொருளே உயர்ந்ததாகக் கருதப்படும். இவ்வாறு மாறிக் கூறுவனவற்றை “விபரீத உவமை” யென்பர் தண்டியாசிரியர்.

இன்னும் மிகப் பெரிய பொருளையெடுத்தும் மிகச் சிறிய பொருளையெடுத்தும் உவமிக்குங்காலும் இன்பமுறும் சிறப்பிற்றீராதவாய்க் கேட்டார் மனங்கொள்ளுமாறு (விரும்புமாறு) வரும் உவமைகளையே எடுத்துக் கூறல்வேண்டும், ஏனெனின்? அவ்வாறு கூறலே ஆன்றோர் மரபாதலின்.

“மாக்கட னடுவ னெண்ணாட் பக்கத்துப்
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்.”

என்றவழி சிறிய கூந்தலுக்கு மிகப் பெரிய பரப்பையுடைய கடலையும் சிறிய நுதலுக்கு மிகப் பெரிய பரப்பையுடைய மதியையும் உவமை கூறலாமோவெனின்? அவ்வுவமைகள் பெருமையுடையனவாயினும் சிறப்புடைமையிற் றீராது கேட்டார் மனங்கொள்ளுமாறு நிற்றலான் அவை கூறத்தக்கனவேயாம்.

இனி, உவமையைக் காட்டும் உருபுகள் ‘அன்ன’ முதலாக முப்பத்தாறும், பிறவும் தொல்காப்பியனாராற் கூறப்பட்டுள்ளன. அவையன்றி உவமான உவமேயங்களுக்கு இடைவருஞ் சொல்லெல்லாம் உவமை உருபாகு மென்பாருமுளர். அன்ன முதலிய உருபுகளுள் வினைமுதலிய நான்கற்கும் உரியவாகவரும் உருபுக