பக்கம் எண் :

பொருளதிகாரம்107

ளிவை யிவையென்றும் அவை உரியவாதற்குக் காரணம் மரபு பற்றி யறியப்படும் எனறுந் தொல்காப்பியர் கூறுவர். அவ்வாற்றைப் பின்வரும் உவம வியலிற் காண்க. உவம வுருபுகள் தொக்குவருதலும் விரிந்துநிற்றலும் பற்றி வினைமுதலிய உவமப்பகுதி நான்கும் எட்டாதலுமுள.

இன்னும் உவமை பெருமையுஞ் சிறுமையும்பற்றி மெய்ப்பாடுகள் எட்டோடுங் கூடிவரும், பெருமையுஞ் சிறுமையும்பற்றி வாராது மெய்ப்பாடெட்டோடு மாத்திரம் வருதலேசிறப்பென்பர் பேராசிரியர். உவமையானே உவமேயத்துக்குற்ற பொருள்கள் அறியப்படும். அறியுங்கால் மரபுபற்றி அறியப்படும். அடையும் பொருளுமாய்வரும் உவமேயத்திற்கு அடையும் பொருளுமாயே உவமையும் வருதல் வேண்டும். Êசிறுபான்மை அடையின்றியும் உவமை வருமென்க. இனி உவமேயப்பொருள்களை உள்ளுறுத்து வைக்கப்படும் உள்ளுறை உவமைகளும் செய்யுளிடத்து வரும். அவைகளை ஓர்ந்துணர்க. அவ்வுள்ளுறை வினை பயன் மெய் உரு பிறப்பு எனவரும் பொதுத்தன்மைகளானே ஐந்து வகைப்படும் என்க. உள்ளுறையுவமைகளைத் தலைவி சொல்லுங்கால் தானறிந்த பொருளானே சொல்லுவள். தோழி சொல்லுங்கால் தந்நிலப் பொருளானே சொல்லுவள். தலைவன் உள்ளுறை சொல்லுங்கால் தன்னறிவுடைமை தோன்றச் சொல்லுவான். அவன் எந்நிலப்பொருளானுஞ் சொல்லுவான். இவர்களல்லாத கூற்றுக்குரிய ஏனையோர் சொல்லுங்காலும் எந்நிலப் பொருளானுஞ் சொல்வர.் தோழியுஞ் செவிலியும் உள்ளுறை சொல்லுங்கால் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்பக்கூறுவர். உவமைகள் இன்பமுந் துன்பமுந் தோன்றச் சொல்லப்படும் என்க. இன்னும் முற்கூறிய இலக்கணங்களின் வேறுபடவரும் உவமைகளும், ஒவ்வாதெனக்கூறி ஒப்பாகக்கொள்ளும் உவமைகளும், பெருமையுஞ் சிறுமையுந் தோன்றக் கூறாமல் இயற்கைபடக் கூறும் உவமைகளும், உவமேயத்தை உவமையாக்கிக் கூறும் உவமைகளும் உளவென்க. உவமைக்குவமை கூறலாகாது. கூறிற்குற்றமாகும். நிரனிறையாகவும் உவமைகள் கூறப்படும். இவற்றை யெல்லாம் ஆன்றோர் செய்யுள் நோக்கியும் பின்வரும் ‘உவமவியல்’ நோக்கியு மறிந்துகொள்க.