இ--ள் : உள்ளுறையுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் என்றவாறு. அவையைந்துமாமாறு 1முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம் ஏனையுவமத்திற்கு நிலைக்களம் ஐந்து ஓதினான், அவ்வாறே இதற்கு நிலைக்களம் ஓதாது அவைபோறலின் அவையே நிலைக்களமாமென்றலும் ஏனையுவமத்துள்2ஒரு சாதியோடு ஒரு சாதியினை உவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறையுவமத்திற்கு அமையுமென்றலுமென்பது. (24) [மேற்கூறிய உள்ளுறை ஐந்து இவையெனல்] 300. | தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினு முறுப்பினு முருவினும் பிறப்பினும் வரூஉந் திறத்திய லென்ப. |
இது மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது. இ--ள் : வினை பயன் மெய் உருவென்கின்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும் என்றவாறு. உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பென்பவாகலானும் மெய்யுவமமெல்லாம் உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மைய வென்றற்கும் அவ்வாறு கூறினானென்பது. ‘தவலருஞ் சிறப்பி னத்தன்மை நாடின்’ என்றதனான் ஏனையுவமத்தினும் உள்ளுறையுவமமே செய்யுட்கும் பொருளிலக்கணத்திற்குஞ் சிறந்ததென்பது. அவை வருமாறு:- “கரும்புநடு பாத்திக் 3 கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வ னீன்றவெம் 4முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.” (ஐங்குறு. 65) என்பது வினையுவமப் போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுட் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசிதீர்க்குமூரனென்றான். இதன்
1. முன்னர் என்றது வருஞ் சூத்திரத்தை. 2. சாதி--பிறப்பு என்பது பேராசிரியர் கொண்ட கருத்து. என்னை? பின் பிறப்பென வருதலின் 307-ம் சூத்திர உரை நோக்குக. 3. கலித்த--முளைத்த. 4. முயங்கல்--தழுவற்க. |