“வண்ண வொண்டழை நுடங்க வாலிழை யொண்ணுத லரிவை 1பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே.” (ஐங். 73) இஃது உருவுவமம். நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாந் தண்ணென்றதெனக் கூறியவழி, அத்தடம் போல இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாளென்பது கருதியுணரப்பட்டது; அவளொடு புனல்பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாளென்பது கருத்து. 2இது நிறமன்றாலெனின் நிறமும் பண்பாகலின் அந்நிறத்தோடு நிறமல்லாத பண்புங் கொள்ளப்படுமென்பது, “வகைபெற வந்த உவமத் தோற்றம்.” (276) என்புழிக் 3கூறினானென்பது. 4”பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூர வெந்நலந் தொலைவ தாயினுந் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.” (ஐங் 63) என்பது பிறப்புவமப் போலி. நல்ல குலத்திற் பிறந்தும் இழிந்தாரைத் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டலென்பாள் அஃதெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப்பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாட்டின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும் பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையிற் பரத்தையர் பிறப்பு இழிந்தமையுந் தலைவி பிறப்பு உயர்ந்தமையுங் கூறி அவன் பிறப்பின் உயர்வுங் கூறினமையின் இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாங் கருதிக் கூறிற் செய்யுட்குச்
1. பண்ணை--விளையாட்டு. 2. இது என்றது தண்மையை, தண்மை நிறமல்லாத பண்பு. 3. கூறினான் என்பது கூறினாமென்றிருத்தல் வேண்டும். உவமவியல் 1-ம் சூத்திர விரிவுரை நோக்குக. இலேசினான் ஆசிரியன், கூறினானென்றல் சிறப்பின்று. கூறினானெனின். ‘என்புழி’ என்பது என்பதனால் என்றிருத்தல்வேண்டும். 4. பொய்கைப்பள்ளி--உயர்குடிக்கும், நீர்நாய்--தலைவற்கும், வாளை--பரத்தையர்க்கும் உவமை என்க. பள்ளி--இடம் (படுக்கை) பொய்கைப்பள்ளி என்றதனால் தலைவியுயர்ச்சியுங் கூறியதாயிற்று. |