“தேர்வண் கோமான் றேனூரன்ன விவள்.” (ஐங். 55) என்பது அவனூரனையாளென வந்தது. ‘வெண்பூம் பொய் கைத்து அவனூர்’ எனத் தலைவனூரின் உள்ளதொன்றனாற் தலைவிக்குவமையே பிறப்பித்த வாறாயிற்று. அல்லாக்கால், 1“வெள்ளை யாம்பலடை கரை.’ (ஐங். 41) என்றதனாற் பயமின்றென்பது. (25) [கிழவியுந் தோழியும் உள்ளுறை சொல்லுங்கால் இவ்வாறு சொல்லவேண்டுமெனல்] 301. | கிழவி சொல்லி னவளறி கிழவி தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது. |
இது மேற்கூறிய உள்ளுறையுவமைக்காவதோர் இலக்கணம். இ--ள் : ஐந்துவகைப்பட்ட உவமப் போலியும் பிறிதொடுபடாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி, அக்கூற்றுத் தலைமகட்குந் தோழிக்கும் உரித்தாங்காற், தலைவிக்காயின் அவளறியுங் கருப்பொருளானே செய்யல்வேண்டுந், தோழிக்காயின் அந்நிலத்துள்ளனவெல்லாஞ் சொல்லவும்பெறும்; பிறநிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப்பெறா ரென்றவாறு. இதனது பயம்: தலைமகள், அந்நிலத்துள்ளனவெல்லாம் அறியுந்துணைப் பயிற்சியிலளெனவும் அவளாயத்தாராயின் அந் நிலத்துள்ளன அறியச் 2சிதைந்ததின்றெனவுங் கூறியவாறு. “ஒன்றே னல்லெ னொன்று வென்.” (குறுந். 208) என்னும் பாட்டினுட், பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை மரம் 3படப்பையிலுள்ளதாகலானுந் தன்னாற் பூக்கொய்யப்படுமாகலானும் அஃது அவளறி கிளவியெனப்பட்டது. “தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை.” (ஐங்குறு. 41) என்பது தோழி கூற்று. என்னை? அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே தலைமகள், பெரும் பேதையாதலினென்பது.
1. வெள்ளையாம்பல் என்பது மேற்கூறிய செய்யுளில் வரும் வெண்பூ என்பதன் பொருள். அடைகரையையுடைய பொய்கை என்க. வெள்ளை யாம்பற்பூ என்றதனால் தலைவி பசப்புடையள் என்னும் உள்ளுறை பெறப்பட்டது. 2. சிதைதல்--அழிதல். சிதைந்ததின்று--குற்றமின்று. 3. படப்பை--தோட்டம். |