1அதிகாரத்தானின்ற உள்ளுறை யுவமையென்பதனை அவளறி கிளவியென்றதற்குப் பெயர்ப் பயனிலையாகவும் நிலம் பெயர்ந் துரையாதென்னும் முற்று வினைக்குப் 2பெயராகவும் வேறு வேறு சொல்லிக் கொள்க. (26) [தலைவன் உள்ளுறையை இவ்வாறு சொல்லுவனெனலும் ஒழிந்தோர்க்கு இடம் வரைவின்றெனலும்] 302. | *கிழவோற் காயி னுரனொடு கிளக்கு மேனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே. |
இதுவும் அது. இ--ள் : கிழவோன் சொல்லும் உள்ளுறையுவமந் தன்3னுடைமை தோன்றச் சொல்லப்படும். ஏனோரெனப்பட்ட பாங்கனும் பாணனு முதலாயினார் சொல்லுங்காலை மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது, 4தாந்தாம் அறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத பொருளானும் அந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமை சொல்லப்பெறுப என்றவாறு. “கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு நுந்தை நும்மூர் வருது மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே.” (ஐங். 62)
1. ‘அதிகரித்து நின்ற’ என்றிருப்பது நலம். 2. பெயர்--எழுவாய். 3. உடைமை--அறிவுடைமை என்றிருப்பது நலம். உரன் என்பதற்கு அறிவு என்பது பொருளாதலின். இளம்பூரணரும் அறிவொடு என்று கூறல் காண்க. 4. தாந்தாம் அறிந்த கிளவியானும் என்பது தானறிந்த கிளவியானும் என்றிருத்தல்வேண்டும். தான் அறிந்தகிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத கிளவியானும் என்பனவற்றை மேலே ‘மேற்கூறிய வகையானே’ என்பதன்முன் வைத்து, அவற்றோடு என என்பதோர் சொற்சேர்த்து, “தானறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந்துரையாத கிளவியானும்” என மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது; எந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறையுவமஞ் சொல்லப்பெறும் எனத் திருத்தி எழுதிக்கொள்க. எந்நிலம் அந்நிலம் என மயங்கி எழுதப்பட்டது. ‘இடம் வரை வின்றே’ என்பதன் உண்மைக் கருத்தை நோக்குவோர்க்கு இது புலனாம். இங்ஙனம் மாறியும் மயங்கியும் எழுதப்பட்டன பல உள. அவற்றை ஆங்காங்குக் காட்டுதும். இதுவே பொருத்தமாதல் 30-ம் சூத்திர உரை நோக்கித் தெளிக. சூத்திர முறையை நோக்கும்போது இச்சூத்திரத்தில் யாதோ பிழை இருப்பதாகத் தோன்றுகிறது. |