என்றவழித், தாய்போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க. 1ஒழிந்தோராயின் வரையறையின்மையிற் காட்டாமாயினாம். அவை வந்துழிக் காண்க. (27) [இன்பமுந் துன்பமுந் தோன்ற உவமை சொல்லப்படும் எனல்] 303. | இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப. |
இதுவும் மேலதற்கே யாவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : மேற்கூறப்பட்ட உள்ளுறையுவமம் இன்ப துன்பங்கள் தோன்றச் சொல்லவும்படும் என்றவாறு. “கழனி 2மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன்.” (குறுந். 8) என்பது பலவகையின்பமும் வருந்தாது பெறுவரென்பதற்கு உவமையாகி வருதலின் இனிதுறு கிளவியெனப்பட்டது. “தாய்3சாப் பிறக்கும் புள்ளிக் 4கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத்து.” (ஐங்குறு. 24) என்பது தலைமகன் 5கொடுமை கூறினமையின் துனியுறு கிளவியாயிற்று. இவ்விரு பகுதியும்படச் செய்யப்படும் மேற்கூறிய உள்ளுறையுவமமென்பது இதன் கருத்து. மருங்கென்னும் மிகையானே ஏனையுவமத்தின்கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும். அவை:--
1. ஒழிந்தோர்க்காயின் என்றிருத்தல் நலம். 2. மாஅத்து--மாமரத்தினது. வாளை தனக்குரிய உணவன்றி உகுதீம்பழத்தையுங் கதுவுமூர் என்றமையானே பலவகையின்ப மென்றார். பலவகையின்பமும் என்று பொருள் கொண்டமை யான் ‘மரத்து’ என்று பாடங் கொண்டாரோ என்பதும் ஆராயத்தக்கது. மரத்து என்பது சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்புப் பாடம். 3. சா--சாக. 4. கள்வன்--ஞெண்டு. 5. நண்டும் முதலையும் அன்பின்றித் தன் கிளைக்கே கொடுமை செய்தல்போலத் தலைமகனும் தன் கிளைக்கு அன்பின்றிக் கொடுமை செய்பவன் என்பதாம். |