பக்கம் எண் :

பொருளதிகாரம்163

“மருந்தெனின் மருந்தே 1வைப்பெனின் வைப்பே.”

(குறு. 71)

என்பது இனிதுறு கிளவி;

2”கராத்தின் வெய்யவெந் தோள்.”

(ஐந். ஐம். 24)

என்பது துனியுறு கிளவி.

(28)

[தலைவி உள்ளுறை கூறும் நிலம் இவை எனல்]

304. கிழவோட் குவம மீரிடத் துரித்தே.

இஃது, அவ்வுள்ளுறையுவமையை வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : தலைமகள் இரண்டிடலத்தல்லது உள்ளுறையுவமை சொல்லப் பெறாள் என்றவாறு.

இரண்டிடமென்பன மருதமும் நெய்தலும்; அந்நிலத்துப் பிறந்த பொருள்பற்றியல்லது உள்ளுறையுவமஞ் சொல்லுதல் கிழத்திக்குரித்தன்றென்பது கருத்து. இவ்விடத்து உரிமையுடைத்தெனவே குறிஞ்சிக்கண் அத்துணை யுரித்தன்றென்றவாறு.

“தாமரை
 வண்டூது பனிமல ராரு மூர
 யாரை யோநிற் புலக்கேம்.”

(அகம். 46)

என்றவழி, வண்டூது பனிமலரெனப் பிறர்க்குரிய மகளிரெனவும் அவரை நயப்பாயெனவும் உள்ளுறையுவமம் மருதத்துக்கண் வந்தது.

“அன்னை வாழிவேண் டன்னை கழிய
 முண்டக மலருந் தண்கடற் சேர்ப்ப
 னெந்தோ டுறந்தன னாயி
 னென்னாங் கொல்லவ னயந்த தோளே.”

(ஐங். 108)

என்பது நெய்தல். இதனுட் கழிய முண்டக மலருமென முள்ளுடையதனைப் பூமலருமென்று உள்ளுறுத்ததனான் 3இருவர் காமத்துறைக்கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென்றா


1. வைப்பு--வைப்புநிதி.

2. கராம்--முதலை.

3. இருவர்--தலைவனும் தலைவியும். ஒருதலை இன்னா என்றாள்; தந்றோளைத் துறந்தமைபற்றி. ஒருதலை இனிது என்றாள்; அவன் நயந்த தோளின்மையின் எந்தோள் வாடுமென்று விரைந்து வரைவான் என்பதுபற்றி. முள்ளி முள்ளாற் றுன்பஞ் செய்தலும் பூவாலின்பஞ் செய்தலுமுடையதுபோல இவனும் ஒருபக்கத்தாற் (பிரிதலாற்) றுன்பமும் ஒருபக்கத்தால் வரைந்து (புணர்வானாதலின்) இன்பமுஞ் செய்தலுடையனென்பதாம்.