ளென்பது. என்றோடுறந்தனனென்பது முள்ளுடைமையோடொக்க, என்னாங்கொல் அவனயந்தோடோளென்றவழி1அவன் அன்பிற்றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சியோடொப்பிக்கப்படும். பிறவும் அன்ன. “குன்றக் குறவர் புல்வேய் குரம்பை மன்றா டிளமழை மறைக்கு நாடன் புரைவன வாழி தோழி விரைபெய லரும்பனி யசைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.” (ஐங். 252) என்னுங் 2குறிஞ்சிப் பாட்டினுள் வறுமைகூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல, வாடைசெய்யும் நோய்தீர்க்க வந்தானென்று உள்ளுறையுவமஞ் செய்தவாறு கண்டுகொள்க. இனிக் கிழவோட்குவமம் பிரிவிடத்துரித்தென்பது பாடமாக உரைப்பாருமுளர். யாதானுமொரு நிலத்தாயினும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமங் கூறப்பெறுங் கிழத்தி என்பது3இதன் கருத்து. ‘பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே’ என்பது 4பிரிவன்றாகலின், ஈரிடமென்றலே வலிதென்பது. (29) [தலைவன் உள்ளுறை கூறுதற்கு வரையறையில்லை எனல்] 305. | கிழவோற் காயி னிடம்வரை வின்றே. |
மேல் “உரனொடு கிளக்கும்” என்றதல்லது இன்னவழிச் சொல்லப்பெறுந் தலைமகனென்றிலன், அதனான் அவற்கு எல்லா நிலனும் உரியவாமென்கின்றா னென்பது. இ--ள் : தலைமகற்கு இடவரையறை இல்லை என்றவாறு. வரையறை யில்லனவற்றுக்கு வரையறை கூறாமே முடியாவோவெனின் அங்ஙனமாயினுங் கிழத்திக்குந் தோழிக்கும் இடம் வரையறுத்ததனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலைமகற்கும் இடம் வரையறையுண்டுகொலென்று கருதிற் கருதற்கவென்றற்கு இது கூறினானென்பது. (30)
1. அவள் என்றிருப்பது சிறப்பு. 2. குறிஞ்சிப்பாட்டு என்றது, குறிஞ்சி ஒழுக்கத்திற்குரிய பாட்டு என்பது கருத்து. 3. இதன்--இப்பாடத்தின். 4. வந்தது புணர்ச்சிப்பொருட்டாகலின் பிரிவன்றாமென்ற படி. |